A Radio For

Get Domain Offer

இனிதே நடைபெற்ற ஹிப் ஹாப் ஆதி நிச்சயதார்த்தம்!!!

(HipHop Tamizha Adhi Engagement today)
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல அவதாரத்தில் ஜொலித்து வரும் ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி “ஆம்பள” படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து “தனி ஒருவன்”, “அரண்மனை 2”, “கத்தி சண்டை” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
“மீசைய முறுக்கு” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் “கலகலப்பு 2” படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஆதி.
நடிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தி வரும் ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
“இனி சிங்கிள் கிடையாது. உங்களின் ஆசிர்வாதம் தேவை. நன்றி.” என்று தனது திருமணம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ஆதி.
மேலும் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் புகைப்படத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
இந்த செய்தியை கேட்ட அனைவரும் ஹிப் ஹாப் ஆதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

எங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்

Our Radio App

Our Apps

Jaffnaradio.comJaffnaradio.com

Yazhpanam FM App








Pages